பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்று உரையாற்றிய பறையர் சங்கத்தின் முப்பெரும் விழா

சென்னை கோயம்பேடு மார்க்கெட் எதிரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் பறையர் சங்கத்தின் முப்பெரும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்று உரையாற்றினார்.

அப்போது மேடையில் பேசிய அவர்,

தமிழ்நாட்டில் இரு பெரும் சமுதாயங்கள் இருக்கிறது. இன்று கூட அவை ஒரே குடிசையில் தான் இருக்கின்றனர்.
படிப்பறிவு, வேலைவாய்ப்பு சரி வர இல்லாத சூழல் உள்ளது.

திராவிட கட்சிகள் சமூதாயங்களை வாக்கு வங்கிகலாக பயன்படுத்தி வருகிறது. இன்று தமிழ்நாட்டில் இருக்கிற தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்கு செய்தது பாமக தான். நாகள் செய்ததை தமிழ்நாட்டு கட்சிகள் யாராவது செய்து உள்ளனரா என்று சவால் விடுகிறேன். இருகட்சிகளுகும் இடையில் சில பிரச்சனைகள். ஆனால் அதனை திராவிட கட்சிகள் ஊதி பெரிதாக்குகிறது..

சில நாட்களுக்கு முன் 12,11,10 பொது தேர்வு முடிவுகள் வந்தது. அதில் கடைசி 15 மாவட்டங்கள் வடமாவட்டங்கள் தான். 40 வருடங்களாக இந்த நிலையில் தான் வடமாவட்டங்களில் உள்ளது…

தமிழ்நாட்டில் ஆட்சி செய்ய 35 விழுக்காடு தேவை. கிட்டதட்ட 40 விழுக்காடு வடமாவட்டங்களில் பின்தங்கிய சமூக மக்கள் உள்ளனர். ஆனால் முறையான கல்வியை சரி செய்ய எந்த எண்ணமும் திராவிட கட்சிகளுக்கு வரவில்லை. டாஸ்மாக் விற்பனை தான் அவர்களுக்கு முதலில் நினைவுக்கு வருகிறது. மக்கள் இதை யோசித்து பார்க்க வேண்டும்…..

ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒவ்வொரு அமைச்சர் உள்ளார். ஒவ்வொரு வருடமும் திருவண்ணாமலை கல்வியில் கடைசி இடத்தில் வருகிறது என்று ஏ. வா. வேலுவிடம் கேட்கிறேன். உங்களுக்கு உங்கள் மாவட்டம் கல்வியில் பின் தங்கியது குறித்து கவலை இல்லையா?

விழுப்புரம் மாவட்டம் பொன்முடி அமைச்சருடையது. அந்த மாவட்டமும் கடைசி இடத்தில் தான் வருகிறது.
இது தான் திராவிட மாடல் ஆட்சியா?

தமிழ்நாட்டு மக்களை காப்பாற்ற வேண்டும் என்கிற ஆசை எனக்கு உள்ளது. தமிழக மக்கள் அதனை காப்பாற்றுவார்கள்.
சமூக நீதி பேச்சு வழக்கில் தான் இருக்கிறது. நடைமுறையில் இல்லை. பாமக தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்தால் சமூக நீதி அடித்தளத்தில் உள்ள அனைத்து சமுதாயத்திற்கும் கிடைக்கும்…

பிரச்சனைகளை உருவாக்கினால் தான் அதில் மீன் பிடிக்கமுடியம் என திராவிட கட்சிகள் இருக்கின்றன….
இந்திய மருத்துவ படிப்புகளில் தலித் சமூதயதிற்கு இட ஒதுக்கீடு கொடுக்க சொன்னவர் ராமதாஸ் தான்.. திராவிட கட்சிகள் அடையாளதிற்காக பலவற்றை செய்து வருகிறது. ஆனால் அது எங்கள் டிஎன்ஏவில் கிடையாது. எங்களுக்கு நடிக்க தெரியாது.

எங்களின் ஒரே நோக்கம் நல்லிணக்கம் உருவாக வேண்டும் என்பது தான். அப்படி உருவானால் மட்டுமே மக்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும்.
அனைத்து பின் தங்கிய சமூதாயங்களும் ஒன்று சேர வேண்டும். அவர்கள் ஒன்று சேர்ந்து ஆள வேண்டிய நேரம் வந்துவிட்டது…

தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் எந்தனை பேருக்கு மந்திரி பதவி கொடுத்து உள்ளனர்.
தமிழ்நாட்டில் மொத்தம் 44 தனி தொகுதிகள் உள்ளன அதில் 23 தனி தொகுதிகள் திமுக உறுப்பினர்கள் வெற்றி பெற்று உள்ளனர். ஆனால் 3 அமைச்சர்கள் தான் தாழ்த்தப்பட்டவர்கள் இருக்கிறார்கள் 7 அமைச்சர்கள் தரவேண்டும், ஆனால் திராவிட கட்சிகள் தருவதில்லை திமுக மட்டுமில்லை அதிமுக கட்சியும் அப்படித்தான் நடந்துகொள்கிறது.

ஏன் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் திறன் வாய்ந்தவர்கள் இல்லையா? அவர்களுக்கு நிதித்துறை, போக்குவரத்து, கல்வி துறைகளை கொடுக்கலாமே? ஏன் கொடுப்பது இல்லை.

என்னுடைய ஆதங்கம் சட்டிஸ்கர், பீகார் போன்ற மாநிலங்கள் தமிழ்நாட்டு உடன் ஒப்பிட கூடாது. சிங்கப்பூர் உடன் ஒப்பிடவேண்டும். ஏன் என்றால் தமிழ்நாட்டில் அநேக வளங்கள் உள்ளது.

அம்பேத்கர், பெரியார், கார்ல் மார்க்ஸ் ஆகிய மும்மூர்த்திகளின் கொள்கைகளை தான் பாமக பின்பற்றி வருகிறது

பின்பு செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி

தமிழ்நாட்டில் சமூக நீதி நிலையாக இருக்க வேண்டும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் ஒதுக்கப்பட்ட மக்கள் காலகாலமாகவும் நீக்கப்பட்ட மக்கள் முன்னுக்கு வர வேண்டும் பாட்டாளி மக்கள் கட்சி மருத்துவர் ராமதாஸ் ஐயா அவர்கள் 44 ஆண்டு காலமாக உழைக்கின்ற அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்ற நோக்கத்தில் எங்களது இயக்கத்தை நடத்தி வருகிறார்

சமூக நல்லிணக்கம் அனைத்து சமுதாயங்கள் மத்தியிலே இருக்க வேண்டுமென்று எங்களுடைய நோக்கம் அப்படி இருந்தால் தான் வளர்ச்சி

கடந்த 40 ஆண்டு காலமாக வட மாவட்டங்களில் பின்தங்கிய நிலையில் காணப்படுகிறது கடைசி உள்ள 15 மாவட்டங்களில் அதிகம் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் பட்டியல் இன மக்கள், வன்னியர்கள் இதை ஆளுகின்ற அரசாங்கம் கண்டு கொள்ளவில்லை.

விழுப்புரம் மாவட்டம் டாஸ்மாக் விற்பனையில் முதலிடம் ஆனால் கல்வியில் கடைசி இடம். அங்கு உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி இருக்கிறார் கல்வியில் எந்த மாற்றமும் கொண்டு வரவில்லை.

இளநிலை மருத்துவப் படிப்புகளில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான 15 சதவீத இடங்கள் தவிர மீதமுள்ள 85 சதவீத இடங்களும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களும் இந்தக் கலந்தாய்வின் மூலமாகவே நிரப்பப்படுகின்றன.

அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவ கல்லூரிகள் வந்துவிட்டன எதற்காக மத்தியில் அதை கொடுக்க வேண்டும்
தமிழ்நாட்டில் உள்ள இடங்களை தமிழக அரசே முழுமையாக நிரப்ப வேண்டும்.

செந்தில் பாலாஜி ஏப்ரல் 12 ஆம் தேதி 500 மது கடைகளை மூடுவதாக அறிவித்திருந்தார். இரண்டு மாதங்கள் ஆகிவிட்டது இன்னும் ஒரு கடைகள் கூட மூடப்படவில்லை

தமிழகத்தில் 24 மணி நேரமும் மது கிடைக்கிறது இப்போது இருக்கின்ற அமைச்சர் மது விலக்கிற்கு சரியானவர் அல்ல. அமைச்சர் செந்தில்பாலாஜி மதுவிலக்கு அமைச்சராக இல்லாமல் மது திணிப்பு அமைச்சராக செயல்பட்டு வருகிறார்

கார்டு போட்டால் மதுபட்டிகள் கிடைக்கும் இயந்திரங்கள் தற்போது தேவையா? இது நாட்டிற்கு வளர்ச்சியா?

ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து பூரண மதுவிலக்கு என்று கூறிய முதலமைச்சர் தற்போது அன்றைக்கு வேறு நிலைப்பாடு இன்றைக்கு வேறு நிலைப்பாடு என்று செயல்பட்டு கொண்டிருக்கிறார்

இந்தியாவின் அதிக விதவைகள் உள்ள மாநிலம் தமிழ்நாடு. நுரையீரல் பிரச்சனை மற்றும் தற்கொலை பிரச்சனைகள் உள்ள மாநிலமாக தமிழ்நாடு செயல்பட்டு கொண்டிருக்கிறது இதற்குக் காரணம் மது.

தமிழ்நாடு விரைவில் குடிகார நாடு என்று பெயர் மாற்ற நிலைக்குவந்து விட்டோம்.

நாடாளுமன்றத் தேர்தல் நிலைப்பாட்டினை விரைவில் அறிவிக்கப் போவதாக கூறினார்

விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு பக்கம் உரிமை மரபு ஒரு பக்கம் மரபு வழிபாடு இதை இரண்டையும் அரசாங்கம் கையில் எடுத்த பக்கமாக செயல்பட வேண்டும் கோவிலுக்கு செல்வதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு அதே வேலையில் தெய்வீக மரபினை கருத்தில் கொள்ள வேண்டும்.

அதிகாரத்தையும் பதவியையும் வைத்து இந்த பிரச்சனையை தீர்த்தால் அங்கு வாழ்கின்ற மக்கள் வாழ்வதற்கு சுமூகமான சூழ்நிலை இருக்காது…

சுமுக பேச்சு வார்த்தை நடத்தி இதனை தீர்வு காண வேண்டும் அமைதி நிலைப்பட்டிருக்கு முயற்சித்து இருக்கிறோம்

ஆளுநர் மற்றும் முதலமைச்சர் இருவரும் அரசியல் சாசனம் பொறுப்புள்ளவர்கள் அவர்கள் இருவரும் இணைந்து செயல்படுவது மட்டுமே தமிழ்நாடு வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லும்.

சில நேரங்களில் ஆளுநர், பாஜக அரசின் கொள்கையை கடைப்பிடித்துக் கொண்டிருக்கிறார் அது மிகவும் தவறான ஒன்றாக பார்ப்பதாக கூறினார்

ரயில்வே துறை மற்றும் பாதுகாப்பாக தனி ஒதுக்கீடு செய்து பாதுகாப்பு கருவிகளை கொடுத்து அனுப்ப வேண்டும் எனவும் அதற்கென்று நிதி ஒதுக்கீடு செய்து அதனை வேகமாக செயல்படுத்த வேண்டும்.

2026-இல் தமிழகத்தில் பாமக தலைமையில் கூட்டணி ஆட்சி அமைப்பதை இலக்காகக் கொண்டு இயங்கி வருகிறோம்.

Previous post A Special Weekend for Cooking Enthusiasts as Phoenix Marketcity Chennai Hosted a Masterclass by the Legendary Chef Sanjeev Kapoor
Next post First time in Rest of Tamil Nadu, Meenakshi Mission Hospital performs Trans Catheter Mitral Valve Repair TMVr, an extremely challenging heart valve procedure