சென்னை: குழந்தைகள் மீதான குற்றங்களை தடுப்போம் என்ற தலைப்பில் முதலாவது DPL கிரிக்கெட் போட்டி சென்னை கொளத்தூரிலுள்ள சோகா இகேடா கல்லூரி மைதானத்தில் ஆகஸ்ட் 10 அன்று நடைபெற உள்ளது.
இந்த கிரிக்கெட் போட்டிக்கான பரிசு கோப்பை மற்றும் போஸ்டர் வெளியீட்டு விழா சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் கிளப் அரங்கில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு இந்திய சமூக நல்வாழ்வு அமைப்பின் தலைவர் ஹரிஹரன் தலைமை வகித்தார்.
மலேசியாவுக்கான இந்திய துணை தூதர் மேதகு சரவணக்குமார் குமார வாசகம் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசு கோப்பையை அறிமுகப்படுத்தி வாழ்த்திப் பேசினார்.
தமிழ்நாடு கிரிக்கெட் அகாடமியின் தலைமை பயிற்சியாளர் சுரேஷ்குமார் அவர்கள் போட்டிக்கான போஸ்டரை வெளியிட்டு வாழ்த்திப் பேசினார்.
சென்னை மாவட்ட குழந்தைகள் நல கமிட்டி தலைவர் ராஜ்குமார், குழந்தைகள் உரிமை செயற்பாட்டாளர் மாலிக் ஆகியோர் குழந்தைகள் மீதான குற்றங்களை தடுப்பது குறித்து விழிப்புணர்வு உரையாற்றினர்.
இந்த கிரிக்கெட் போட்டியில் சென்னையிலுள்ள அமெரிக்கா மற்றும் மலேசியா நாடுகளின் துணை தூதரகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் பங்கேற்று விளையாடுகின்றனர்.