எஸ்‌.ஆர்‌.எம்‌ கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்லூரி 28வது ஆண்டு விழா

எஸ்‌.ஆர்‌.எம்‌ கல்விக்‌ குழுமத்தின்‌ அங்கமான எஸ்‌.ஆர்‌.எம்‌ கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்லூரியின்‌ 28வது ஆண்டு விழா 13.05.2022 அன்று காலை. 11.00 மணிக்கு கல்லூரி வளாகத்தில்‌ அமைந்துள்ள முனைவர்‌. டி. பி. கணேசன்‌ கலையரங்கில்‌ நடைபெற்றது.

எஸ்‌.ஆர்‌.எம்‌ கல்விக்‌ குழுமத்தின்‌ தலைவர்‌ திரு. டாக்டர்‌. ரவி பச்சமுத்து அவர்கள்‌ தலைமையேற்று விழாவினை சிறப்பித்தார்‌. கல்லூரியின்‌ தாளாளர்‌ உயர்திரு. ஹரிணி ரவி பச்சமுத்து அவர்கள்‌ முன்னிலை வகித்தார்‌.

கல்லூரியின்‌ துணை முதல்வர்‌ திரு. ௧. மதியழகன்‌ அவர்கள்‌ வரவேற்புரையாற்றினார்‌.

எஸ்‌.ஆர்‌.எம்‌. கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்லூரியின்‌ முதல்வர்‌ முனைவர்‌. இரா. வாசுதேவராஜ்‌ அவர்கள்‌ ஆண்டறிக்கையினை வாசித்தளித்தார்‌.

சிறப்பு விருந்தினர்கள்‌, செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்‌ திரு.G.சுகுனாசிங்‌ IPS அவர்கள்‌ மாணவ மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்‌ மற்றும்‌ பரிசினை வழங்கி விழா பேருரையாற்றினார்‌ மற்றும்‌ செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர்‌
திரு. A.பாரத்‌ IPS அவர்கள்‌ கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்‌.

கல்லூரியின்‌ வணிகவியல்‌ துறைத்தலைவர்‌ முனைவர்‌ P.சத்தீஷ்‌ பாபு அவர்கள்‌ நன்றியுரையாற்றினார்‌.

முனைவர்‌ S.ராமசந்திரன்‌, நிர்வாக துணை இயக்குநர்‌, எஸ்‌.ஆர்‌.எம்‌ கல்விக்‌ குழுமம்‌, முனைவர்‌ D.ஆன்டனி அசோக்‌ குமார்‌, துணை பதிவாளர்‌, முனைவர்‌ R.மோகனகிருஷ்ணன்‌, உடற்கல்வி இயக்குநர்‌, எஸ்‌.ஆர்‌.எம்‌ அறிவியல்‌ மற்றும்‌ தொழில்நுட்ப நிறுவனம்‌ மற்றும்‌ எஸ்‌.ஆர்‌.எம்‌ கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்லூரியின்‌ பேராசிரியர்கள்‌ மற்றும்‌ ஊழியர்கள்‌ பங்கேற்றனர்‌.

Hero fincorp Previous post Home improvement top reason why Indians take instant personal loan, shows data from SimplyCash
VS Hospitals launches a dedicated Centre for Geriatric Oncology Next post விஎஸ் மருத்துவமனையில் முதியோருக்கான புற்றுநோயியல் பிரிவு பிரத்யேகமாக அறிமுகம்