வள்ளல் பெ.தெ. லீ. செங்கல்வராய நாயக்கர் 196 வது பிறந்தநாள் விழா
சென்னை -, ஏப்ரல் – 10,
வள்ளல் பெ.தெ. லீ. செங்கல்வராய நாயக்கர் 196 வது பிறந்தநாள் விழா வேப்பேரி செங்கல்வராய நாயக்கர் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
பிறந்த நாளை முன்னிட்டு பொது மருத்துவம் ,கண் மருத்துவம் , சித்த மருத்துவம் முகாம் மற்றும் 2000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது .
முன்னதாக வளாகத்தில் உள்ள பால விநாயகர் ஆலயத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
மேலும் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் ,பள்ளி கல்லூரிகளில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
பெ.தெ. லீ. செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளையின் அறங்காவலர் ஓய்வு பெற்ற நீதியரசர் பொன் .கலையரசன் தலைமையில் நடை பெற்ற இந்நிகழ்ச்சியில் செயலாளர் எம் .சாம்பசிவம் , இயக்குனர் எம். அருளரசு , உறுப்பினர்கள் வி. சந்திரசேகர் ,எஸ் . சாத்தப்பிள்ளை, ஆர் . கண்ணையன் , எஸ். ரேணுகா , எச். வெங்கடேஷ், பி . அரிஸ்டாட்டில், வி .ராஜேந்திரன், எம் .என். விஜய் சுந்தரம் , இளந் தமிழன் ஆகியோர் கலந்து கொண்டனர்
மேலும் அறங்கட்டளையின் தலைவர் பொன். கலையரசன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-
இந்தியாவிலேயே முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்ட பதிவு பெற்ற பாலிடெக்னிக் என்ற பெருமையை வேப்பேரி செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளை பாலிபெக்னிக்க்கு உண்டு..
பச்சைப்பன் கல்வி அறக்கட்டளையுடன் இணைந்திருந்த இருநிறுவனம் 1997 ஆம் ஆண்டுக்கு பிறகு தனி அறக்கட்டளையாக செயல்பட தொடங்கியது. .
அதன் பின் இந்நிறுவனச் சொத்துக்களை வரையறை செய்த பின்னர், தொழிற பயிற்சிக் கல்லூரிகள் , கலை மற்றும் அறிவியல , பொறியியல் கல்லூரிகள் என வளர்ச்சி பெற்று பொருளாதாரத்தில மிகவும் பின்தங்கிய கிராம புற வன்னியர், மற்றும் பிற்படுத்தப்பட்ட , பட்டியலின மாணவர்கள் பயன்பெறும் வகையில் குறைந்த கட்டணத்தில் கல்வி சேவையை ஆற்றி வருகிறது.
.
மேலும் பெருநிறுவனங்கள் நடத்தும வளாக வேலை வாய்ப்பு முகாம் மூலம் தேர்வு பெறுவதில் பெ.தெ.லீ. செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளை கல்வி நிறுவனங்கள் முக்கிய இடம் வகிக்கின்றது. என்று தெரிவித்தார்.