சோனியா காந்திக்கு சம்மன் அனுப்பியதை கண்டித்து – ஜோதி பொன்னம்பலம் தலைமையில் கோடம்பாக்கம் ரயில் நிலையம் முற்றுகை

சென்னை, 27 ஜூலை 2022: சோனியா காந்திக்கு சம்மன் அனுப்பியதை கண்டித்து, கோடம்பாக்கம் ரயில் நிலையத்தை காங்கிரசார் முற்றுகையிட்டனர்.

நேஷனல் ஹைரால்டு வழக்கில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் சோனியா காந்தி அமலாக்கத்துறையில் ஆஜராக சம்மன் அனுப்பியதை கண்டித்து தென் சென்னை மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொருளாளர் ஜோதி பொன்னம்பலம் தலைமையில் சென்னை கோடம்பாக்கம் ரயில் நிலையம் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தின் போது மத்திய அரசுக்கு எதிராகவும், அமலாக்கத்துறைக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. பின்னர், போலீசாருடன் நடந்த பேச்சுவார்த்தையில்
காங்கிரஸ் நிர்வாகிகள் அனைவரும் கலைந்து சென்றனர்.

இதில், மாவட்ட துணைதலைவர் வி.ராகுமார்,விருகை பகுதி தலைவர்
கே.கே.கோபாலசுந்தரம், மாவட்ட துணை தலைவர் எஸ்.தேவதாஸ், எஸ்.சி,எஸ்.டி பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் கே.சௌந்தர், 137 வட்ட தலைவர்
எஸ்.ஜெயக்குமார், மாவட்ட பொதுச்செயலாளர் ஜெ.டி. சாலமன்,
மாநில பொதுச்செயலாளர் எம்.அண்ணலட்சுமி, துணை பொதுச்செயலாளர் ஆர்.வி.மோகனகிருஷ்ணன்,
வட்ட துணைத்தலைவர் என்.ஞானசாமி,
வட்ட செயலாளர் பி.சொக்கலிங்கம்,
வட்ட பொருளாளர் ஜி. ராயல் ராமசாமி,
வட்ட துணை தலைவர் ஆர்.அந்தோணிராஜ், வட்ட செயலாளர் இளையராஜா, மாவட்ட செயலாளர்
இரா. ஏழுமலை மற்றும் அலெக்ஸ் பிள்ளை எம்.கே. ஜெய்கிருஷ்ணன், எம்.கார்த்திக், ஜெ.ரவிச்சந்திரன், ஆருன்பாய், என். சொக்கலிங்கம், கே.நடராஜன், எம். காளியமூர்த்தி, பி.ராதாகிருஷ்ணன்
ஆர்.ஆறுமுகம், பூக்கடை ஜீவா, கே.செல்வம், வீரபத்திரன், ஜெ.மோகன், கோயம்பேடு சாமி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Previous post Team Valli Thirumanam win the grand finale of Colors Tamil popular non fiction show Pottikku Potti
Next post உயிர்த்துளி மற்றும் நிலையும் நேர்கோடு குறும்படம் வெளியீட்டு நிகழ்ச்சி