மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் வசந்த் உற்சவம் 2026 தொடக்கம் கலை மற்றும் கலாச்சார சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது

​சென்னை, 02 மே 26: மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் கோயிலில், ‘வசந்த் உற்சவம் 2026’ கலைத் திருவிழா கோலாகலமாகத் தொடங்கியது. சரஸ்வதி கல்வி கலாச்சார மற்றும் அறக்கட்டளை மற்றும் கபாலீஸ்வரர் திருக்கோயில் இணைந்து நடத்தும் இந்த விழா, மறைந்த முன்னாள் முதன்மை அறங்காவலர் ஸ்ரீ ரவி கர்யாலி அவர்களின் நினைவாக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

​இந்த விழாவினை உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சி. நாகப்பன் மற்றும் அமெரிக்காவின் லிங்கன் குளோபல் சட்ட நிறுவனத்தின் நிறுவனரும், சர்வதேச வழக்கறிஞருமான ஆர். பிரபாகரன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி முறைப்படி தொடங்கி வைத்தனர்.

இந்திய கலாச்சாரத்தை மேம்படுத்தியதற்காக பல்வேறு துறைகளைச் சேர்ந்த அறிஞர்கள் மற்றும் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன:
​குரு ஸ்ரீமதி ரோஜா கண்ணனுக்கு இந்திரா கர்யாலி விருதுடன் ஆச்சார்யா சிரோமணி’ பட்டம் வழங்கப்பட்டது.

சேலம் இஸ்கான்
தலைவர்
​ஸ்ரீ கோகுல் சந்திர தாஸ்க்கு

ஸ்ரீ காசிநாத் கர்யாலி விருதுடன் விஷ்ணு பிரியா’ பட்டம் வழங்கப்பட்டது.

சென்னை
சமஸ்கிருதக் கல்லூரி,முதல்வர்
​டாக்டர் ஸ்ரீ சி. ஹரிஹரன் க்கு

ஸ்ரீ காசிநாத் கர்யாலி விருதுடன் ‘சமஸ்கிருத-சேவா-பாஸ்கரா’ பட்டம் வழங்கப்பட்டது.

​குரு ஸ்ரீமதி சுகன்யா ரவீந்தர்க்கு

ஸ்ரீமதி இந்திரா கர்யாலி விருதுடன் ‘விசிஷ்ட ஆச்சார்யா’ பட்டம் வழங்கப்பட்டது.

காஷ்மீர் கலாச்சார ஆர்வலர்
​போஷ்கர் நாத் ரெய்னாக்கு

ஸ்ரீ காசிநாத் கர்யாலி விருதுடன் ‘காஷ்மீர் ரத்னா’ பட்டம் வழங்கப்பட்டது.

சைவ சித்தாந்த அறிஞர்
​ எஸ். குஞ்சிதபாதம் க்கு ‘இன்ஜினியர் குப்புராஜ் விருது’ வழங்கி கௌரவிக்கப்பட்டது.

வேத அறிஞர்
​கல்வ குண்டல பார்கவ சார்யுலு இவருக்கு ஸ்ரீ காசிநாத் கர்யாலி விருது வழங்கப்பட்டது.

​இந்த வசந்த் உற்சவம் மே 1-ஆம் தேதி முதல் மே 10-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் சுமார் 20-க்கும் மேற்பட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

பின்பு பேசிய சரஸ்வதி கல்வி கலாச்சார மற்றும் அறக்கட்டளை நிர்வாகி பிரியதர்ஷினி ராஜ்குமார்

பாரம்பரிய மீட்டுருவாக்கம்:
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் தடைப்படுவதற்கு முன்னதாக, நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக கோயில்களில் நிகழ்த்தப்பட்ட செவ்வியல் நடனக் கலைகளை மீண்டும் கோயில் வளாகத்திற்குக் கொண்டு வரும் நோக்கில், கடந்த 18 ஆண்டுகளாக இந்த விழா மே 1-ஆம் தேதி முதல் நடத்தப்பட்டு வருகிறது.

இளைய தலைமுறை கலைஞர்களுக்கு மேடை வாய்ப்புகளை வழங்குவதும், சாமானிய மக்களிடையே இந்திய பாரம்பரிய கலைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இவ்விழாவின் முக்கிய நோக்கமாகும். என்று கூறினார்..