அஞ்சு பாய் கட்டாரியா- ஹேம்ராஜ் கட்டாரியா டிரஸ்ட் சார்பில் பெரம்பூர் பகுதியில் 78வது சுதந்திர தின விழா கொண்டாட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு!

அஞ்சு பாய் கட்டாரியா- ஹேம்ராஜ் கட்டாரியா டிரஸ்ட் சார்பில் பெரம்பூர் பகுதியில் 78வது சுதந்திர தின விழா கொண்டாட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு!

பெரம்பூர்: இந்தியாவின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு
அஞ்சு பாய் கட்டாரியா- ஹேம்ராஜ் கட்டாரியா டிரஸ்ட் சார்பில் சுதந்திர தினவிழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி
சென்னை பெரம்பூர் வீனஸ் பூங்கா எதிரில் இதன் நிறுவனத்தலைவர் மனித நேயர் முனைவர்.உத்தம் சந்த் கட்டாரியா அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில் செய்தி வாசிப்பாளர் மோகன்ராஜ் அவர்கள் முன்னிலை வகித்தார்.

மேலும் இந்நிகழ்வில் நடிகர் ஒய். ஜி. மகேந்திரன் நடிகை ஓய். ஜி. மதுவந்தி மற்றும் நடிகர் ரோபோ சங்கர், பிரவீன் பர்மார் உத்தம் மற்றும் கமலா பாய் உத்தம் பர்மார்
ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.

மேலும் இந்நிகழ்வில் தொழிலதிபர் சடகோபன் ராஜு, பத்மபிரியா ராஜு,டான் போஸ்கோ பள்ளி ஆசிரியர் ஆனந்தராஜ், தொழிலதிபர் ரெட் ஸ்ட்ரீட் தினேஷ், சுதா மகேந்திரா, சமூக சேவகர் விஜயலட்சுமி, புலவர் சுகுமாரி, தனசேகர், உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் முனைவர் உத்தம் சந்த் கட்டாரியா அவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்நிகழ்வினை நடிகரும், சமூக ஆர்வலருமான பிரவீன்குமார் அவர்கள் சிறப்பாக ஒருங்கிணைந்திருந்தார்.

மேலும் பன்முக திறன் பேச்சாளர்களான ஸ்டாலின் பாரதி மற்றும் சச்சின் ஆகியோர் சுதந்திர தினத்தின் முக்கியத்துவம் குறித்து திறம்பட பேசினர்.

இந்நிகழ்வின் ஒரு பகுதியாக பெரம்பூர் பகுதி பொதுமக்களுக்கு தேவையான வீட்டு உபயோக பொருட்கள், விலையில்லா பழ மரக்கன்றுகள், மருத்துவம் மற்றும் கல்வி உபகரணங்கள், அறுசுவை உணவுகள் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டது.


Previous post பூர்விகா அப்ளையன்ஸ் நிறுவனத்தின் 20வது கிளை திறப்பு விழா
Next post ஆழ்வார்பேட்டை, காவேரி மருத்துவமனை தொடங்கும் நடமாடும் நலவாழ்வு கிளினிக்