பூர்விகா அப்ளையன்ஸ் நிறுவனத்தின் 20வது கிளை திறப்பு விழா

சென்னை பாலவாக்கம், 14 ஆகஸ்ட் 2024: பூர்விகா அப்ளையன்ஸ் நிறுவனத்தின் 20-வது கிளை கிழ்க்கு கடற்கரை சாலை, அட்வென்ட் கிறிஸ்தவ திருச்சபை அருகில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கிளையின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு பூர்விகா அப்ளையன்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி யுவராஜ் நடராஜன், நிர்வாக இயக்குனர் கன்னி யுவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி புதிய ஷோரூமை திறந்து வைத்தனர்கள்.

இந்த விழாவில் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி யுவராஜ் நடராஜன் பேசுகையில், மொபைல் போன் என்றாலே தமிழர்கள் மனதில் நம்பர்-1 இடத்தை பிடித்திருப்பது பூர்விகா நிறுவனம். இந்த நிறுவனம் கடந்த 20ஆண்டுகளாக 475+- க்கும் மேற்பட்ட ஷோரூம்களுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தற்போது டி.வி.,பிரிட்ஜ், வாஷிங் மெஷின், ஏ.சி. மற்றும் வீட்டு உபயோக பொருட்களை தரத்துடன் விற்பனை செய்ய பூர்விகா அப்ளையன்ஸ் பாலவாக்கம் தொடங்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

நிர்வாக இயக்குனர் கன்னி யுவராஜ் பேசுகையில், பூர்விகா நிறுவனத்தை நம்பர்-1 நிறுவனமாக வளர்த்த வாடிக்கையாளர்களுக்கு நன்றி. வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவையை வழங்குவதில் நம்பர்-1 இடத்தைப் பிடித்த பூர்விகா அப்ளையன்ஸின் 20- வது ஷோரூம் பாலவாக்கத்தில் தற்போது திறக்கப்பட்டுள்ளது.

உலகத் தரம் வாய்ந்த வீட்டு உபயோக பொருட்களை இங்கு குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. முதற்கட்டமாக பூர்விகா அப்ளையன்ஸ் தமிழகம் முழுவதும் 100 கிளைகளை திறக்கப்பட வேண்டும் என்ற மைல்கல்லை எட்டும் இலக்குடன் செயல்பட்டு வருகிறோம் என்று கூறினார்.

பூர்விகா அப்பளையன்ஸ் திறப்பு விழாவையொட்டி மொபைல் போன் லேப்டாப், ஏ.சி. பிரிட்ஜ்,வாஷிங் மெஷின் உள்ளிட்ட அனைத்து விதமான வீட்டு உபயோக பொருட்களுக்கும் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது.

தவணை முறையில் பொருட்களை வாங்குபவருக்கு 1 மாத இ.எம்.ஐ. இலவசம். ரூ.15,000 எக்சேஞ்ச் போனஸ், வாங்கும் பொருட்களின் மதிப்பு அடிப்படையில் ரூ.20 ஆயிரம் வரை உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இங்கு வாங்கப்படும் வீட்டு உபயோக பொருட்கள் இலவசமாக வீடுகளுக்கு டெலிவரி செய்யப்படுகின்றன. வாங்கும் அனைத்து பொருட்களுக்கும் நிச்சய பரிசு வழங்கப்படுகிறது.

மேலும், திறப்பு விழா சிறப்பு சலுகையாக, 5000 ரூபாய்க்கு மேல் பொருட்களை வாங்கி, காண்டஸ்டில் பங்குபெற்று, ஒவ்வொரு மூன்று மணி நேரத்துக்கும், ஒரு சவரன் கோல்டு வவுச்சர் வெல்லும் வாய்ப்பை பெருங்கள்!

Previous post Saveetha Engineering College Becomes First Affiliated HEI in India to Introduce Fully Flexible Choice-Based Credit System
Next post அஞ்சு பாய் கட்டாரியா- ஹேம்ராஜ் கட்டாரியா டிரஸ்ட் சார்பில் பெரம்பூர் பகுதியில் 78வது சுதந்திர தின விழா கொண்டாட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு!