KKR மருத்துவமனை 2002-ல் முன்னோடி அறுவை சிகிச்சை மூலம் தொண்டை புற்று நோயாளி உயிர் பிழைத்ததன் 22-ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது
சென்னை: 28 மே 2024 – KKR ENT மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் புற்றுநோய் சிகிச்சையளித்தல் மற்றும் குணமடைதல் பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைப் பகிர்ந்துகொள்வதில் பெருமிதம் கொள்கிறது. 2002-ஆம் ஆண்டில், தொண்டைப் புற்றுநோய் பெரிதும் பரவியிருந்த நிலையில் கண்டறியப்பட்ட ஒரு நோயாளி 22 ஆண்டுகளுக்கும் மேலாக உயிர் பிழைத்திருப்பது மட்டுமின்றி, ஆந்திரப் பிரதேசத்தில் ஓர் ஆசிரியராக, பேசிக்கொண்டு, பணிபுரிந்துகொண்டு, ஒரு துடிப்பான வாழ்க்கையைத் தொடர்கிறார். 2002-ஆம் ஆண்டில், அப்போது 27 வயதான திரு. போனடே…
