கிண்டியில் உள்ள சிறு குறு நடுத்தர நிறுவன வளாகத்தில் சிறுதானிய உணவு வகைகளின் கண்காட்சி
இன்றைய காலகட்டத்தில் சிறுதானிய உணவு தவிர்க்க முடியாத மிக முக்கியத்துவம் வாய்ந்த உணவாக உருவெடுத்துள்ளதாக எம் எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையின் முதன்மை விஞ்ஞானி பரசுராமன் தெரிவித்துள்ளார்.
2023 ஆம் ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. இதனையொட்டி சென்னை கிண்டியில் உள்ள சிறு குறு நடுத்தர நிறுவன வளாகத்தில் சிறுதானிய உணவு வகைகளின் கண்காட்சி இன்று நடைபெற்றது.
ஆக்ரோ டெக் இன்டெகரேட் ஃபார்மர்ஸ் ப்ரெடியூசர் நிறுவனத்தின் சார்பாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சிறு தானிய வகைகள் மற்றும் சிறுதானியத்தில் செய்யப்பட்ட உணவு வகைகள் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டடு பேசிய எம் எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையின் முதன்மை விஞ்ஞானி பரசுராமன் ஐக்கிய நாடுகள் சபை 2023 ஐ சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக அறிவித்துள்ளதாகவும் இதனை முன்னிட்டு சிறு தானியங்களை எவ்வாறு அதிகப்படியாக உற்பத்தி செய்வது. உற்பத்தி செய்யப்பட்ட சிறு தானிய வகைகளை எவ்வாறு லாபத்துடன் சந்தைப்படுத்துவது என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டதாகவும் ஏழைகளின் உணவாக இருந்து வந்த சிறு தானிய உணவுகள் வகைகள் தற்போது அனைவருமே கட்டாயமாக அருந்தக்கூடிய உணவாக இடம் பெற்றுள்ளதாகவும் குறிப்பாக சர்க்கரை மற்றும் பிபி உள்ளிட்ட பல்வேறு நோயால் பாதிக்கு பட கூடியவர்கள் இந்த சிறுதானிய வகைகளை கண்டிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து பேசிய அவர் சிறுதானிய வகைகள் மற்றும் அவற்றின் பயன்பாடுகள் குறித்து இந்த ஆண்டு முழுவதும் பொது மக்களுக்கும் குறிப்பாக இன்றைய இளைஞர்கள் மத்தியிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட உள்ளதாக விஞ்ஞானி பரசுராமன் தெரிவித்தார்.
டாக்டர் என் பரசுராமன் எம் எஸ் சுவாமிநாதன் ரிசர்ச் பவுண்டேஷன் சிறப்பு விருந்தினர் ஆக்ரோடெக் integrated பாமர் ப்ரொடியூசர் கம்பெனி சேர்மன் எஸ் மாணிக்கம் ஆகியோர் உடன் இருந்தனர்.