நியூபெர்க் டயக்னாஸ்டிக்ஸ் சென்னையில் நடத்திய விழிப்புணர்வு வாக்கத்தான்

சென்னை: உலக சுகாதார தினம் அனுசரிக்கப்படுவதையொட்டி இந்தியாவில் தோற்றுவிக்கப்பட்ட முதன்மையான 4 நோயியல் பரிசோதனையக சங்கிலித்தொடர் நிறுவனங்களுள் ஒன்றான நியூபெர்க் டயக்னாஸ்டிக்ஸ், இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழ்நாடு கிளையின் ஒத்துழைப்போடு ஒரு வாக்கத்தான் நிகழ்வை நடத்தியது. “சுயநோயறிதல் சோதனையை தவிர்ப்போம்” என்ற கருப்பொருளை முன்னிலைப்படுத்தி இந்நிகழ்வு நடத்தப்பட்டது.