இளம் விஞ்ஞானிகளுக்கான போட்டியின் பத்தாவது பதிப்பு சென்னையில் ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா (SKI) சார்பில் நடைபெற்றது

சென்னையில் தேசிய விண்வெளி தினத்தில் இந்தியாவின் சந்திரயான் 3 வெற்றியை கொண்டாடிய ரஷ்ய விண்வெளி வீரர்கள்!

சென்னை: ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா (SKI) சார்பில் விண்வெளி தினத்தையொட்டி இளம் விஞ்ஞானிகளுக்கான போட்டியின் பத்தாவது பதிப்பு சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் விண்வெளி வீரர்களுடன் தேசிய விண்வெளி தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய ரஷ்ய விண்வெளி வீரர் செர்ஜி கோர்சகோவ், நிலவில் தரையிறங்கி சந்திரயான் 3 விண்கலம் வெற்றியடைந்ததற்கு இந்தியாவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

முதல் தேசிய விண்வெளி தினத்தில் இந்தியா வந்திருப்பது மிகப்பெரிய கவுரவமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது என்றார். எதிர்காலம் இன்றைய குழந்தைகளுக்கு சொந்தமானது, வானம் எல்லையாக இருக்கவில்லை. விண்வெளி தொடர்பான சாகசங்களில் இந்தியாவின் உறுதியைப் பாராட்டிய அவர், கடின உழைப்பு, கண்டுபிடிப்பு மற்றும் விடாமுயற்சி ஆகியவை சாதனைகளுக்கு வழி வகுக்கும் என்றார். செர்ஜி கோர்சகோவ் 194 நாட்கள் விண்வெளியில் கழித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பத்து நாட்கள் விண்வெளியில் தங்கிய கசாக் நாட்டு விண்வெளி வீரர் எய்டின் ஐம்பெடோவ், இந்தியாவில் இருப்பது மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருப்பதாக கூறினார்.

நிகழ்ச்சியில் டாக்டர் ஸ்ரீமதி கேசன் எழுதிய லெட்ஸ் கோ டு ஸ்பேஸ் என்ற தமிழ் புத்தகம் வெளியிடப்பட்டது. ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா ஐந்து சுற்றுப்பாதை பேலோடுகளையும் மூன்று துணை சுற்றுப்பாதை பேலோடுகளையும் அனுப்பியுள்ளது. சமீபத்தியது, விண்வெளியில் மைக்ரோசாட்லைட்களை ஏவக்கூடிய லைட்-வெயிட் டிப்ளோயர் ஆகும்.

Top