சென்னை சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 195வது மாமன்ற உறுப்பினர் ஏகாம்பரம் தலைமையில் பேராசிரியர் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் மற்றும் 2000 ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஓஎம்ஆர் சாலை மேட்டுக்குப்பத்தில் நடைபெற்றது

இதில் சிறப்பு விருந்தினராக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

உடன் சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார், தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.அரவிந்த்ரமேஷ், ஏ.எம்.வி.பிரபாகராஜா, சென்னை மாநகராட்சி 14வது மண்டலக்குழு தலைவர் வி.இ.மதியழகன், மாவட்ட துணைச் செயலாளர் மனோகரன் உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர்.

Previous post <strong>Colorful New Year with Walkaroo’s Pongal Footwear Collection </strong>
Next post பள்ளிக்கரணையில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்