அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின், சென்னை புறநகர் மாவட்டம், பரங்கிமலை கிழக்கு ஒன்றியம், கோவிலம்பாக்கம் ஊராட்சியில் கிறிஸ்துமஸ் விழா, கோவிலம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் கீதா மணிமாறன், துணைத் தலைவரும் கழக மாணவரணி மாநில துணைச் செயலாளருமான பொறியாளர் லயன் சி. மணிமாறன் தலைமையிலும், காமாட்சி மஹாலில் கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு, கிறிஸ்துமஸ் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கு விழா நடைபெற்றது.
இவ்விழாவில் கோவிலம்பாக்கத்தைச் சேர்ந்த, 12 திருச்சபைகளை சேர்ந்த, 120 மத போதகர்களுக்கு கேக், அரிசி 5 கிலோ, மளிகை பொருட்கள், காய்கறிகள் போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
முன்னதாக கிறிஸ்துமஸ் கேக் வெட்டி வந்திருந்த அனைவருக்கும் வழங்கப்பட்டது. இவ்விழாவில் கோவிலம்பாக்கத்தைச் சார்ந்த கிறிஸ்துவ பெருமக்கள், ஊராட்சி கழக வார்டு உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள் ஏராளமானார் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.