இந்திய குடும்ப நலச்சங்கம்-சென்னை கிளை சார்பில் குறைந்தபட்ச ஆரம்ப சேவை தொகுப்பு (எம்.ஜ.எஸ்.பி) திட்டத்தின் முக்கிய நோக்கம் குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பு!
சென்னை: இந்திய குடும்ப நலச்சங்கம் – சென்னை கிளை சார்பில் குறைந்தபட்ச ஆரம்ப சேவை தொகுப்பு (எம்.ஜ.எஸ்.பி)
திட்டத்தின் முக்கிய நோக்கம் குறித்து செய்தியாளர் சந்திப்பு சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைப்பெற்றது.
அப்போது இச்சங்கத்தின் சென்னை கிளையின் தலைவர் லீலாவதி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மும்பையை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் இந்திய குடும்ப நலச்சங்கம் சமூக சேவை செய்யும் உயரிய நோக்கத்துடன் 1949-ம் ஆண்டு தொடங்கப்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனம்.
இச் சங்கம் இந்தியாவில் 18 மாநிலங்களிலும் சென்னை உள்பட 40-க்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்டு இயங்கி வருகிறது.
இச்சங்கத்தின் சென்னை கிளை 1969-ம் ஆண்டு அசோக் நகரில் தொடங்கப்பட்டு இதன் கீழ் கே.கே.நகர் மற்றும் வடபழனியில் மருத்துவ மையங்கள் இயங்கி வருகின்றன.
மேலும் பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்ட மக்களின் இனப்பெருக்க ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்காக, ஒரே மாதிரியான சேவை எண்ணம் கொண்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து குறைந்தபட்ச ஆரம்ப சேவை தொகுப்பு (எம். ஐ. எஸ். பி) திட்டத்தைச் இச் சங்கத்தின் மூலம் செயல்படுத்தி வருகின்றோம்.
அதுமட்டும் இல்லாமல் ஒருமித்த எண்ணம் கொண்ட மூன்று தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமும் செய்துள்ளோம்.
பேரிடர் காலங்களின் போது மகப்பேறு மற்றும் குழந்தை இறப்பு விகிதத்தை குறைப்பது, எஸ். டி. ஜி 3 (நிலையான வளர்ச்சி இலக்குகள்) மூன்றாவது இலக்கை அடைய இந்த நோக்கம் ஓரளவுக்கு உதவும் என்றும்,அதாவது தற்போதைய தாய் இறப்பு விகிதத்தை ஒரு லட்சம் பிறப்புகளுக்கு 70 ஆகவும், தற்போதைய சிசு இறப்பு விகிதத்தை ஆயிரம் பிறப்புகளுக்கு 12 ஆகவும் குறைக்க வேண்டும் என்றும் நம்புகின்றோம்.
சென்னையில் கடந்த ஆண்டு டிசம்பரில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்காக, கோவிட் விதிமுறைகளை முறையாகப் பின்பற்றி, சென்னையின் பல்வேறு பகுதிகளில் 36 மருத்துவ முகாம்கள் நடத்தி சுமார் 3621 பேர் கலந்துக்கொண்டு பயனடைந்தனர்.
எம்.ஐ.எஸ்.பி.திட்டத்தின் கீழ் பாதிப்புக்குள்ளாகும் மக்களுக்காக இனிவரும் காலங்களில் பேரிடர் கால நிவாரண சேவைகளை
2030க்குள் இந்தத் திட்டத்தின் கீழ், பாலியல் வன்முறையைத் தடுத்து உயிர் பிழைத்தவர்களின் தேவைக்கு உதவவும், எச்.ஐ.வி மற்றும் பிற பாலின நோய்களால் ஏற்படும் இறப்பைத் தடுக்கவும், குறைக்கவும், பேரிடர் காலங்களில் கருக்கலைப்பு பராமரிப்பு சேவைகளை சுகாதார மையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் முழு அளவில் கிடைப்பதை உறுதி படுத்துதல் போன்ற சேவைகளை செய்ய இந்திய குடும்ப நலச்சங்கம் முடிவு செய்துள்ளது என்றும் கூறினார்.