ஃபேர்பிளே இணையத்துக்கு எதிராக வயாகாம்18 நிறுவனம் தொடர்ந்த வழக்கில் முக்கிய பங்குதாரர் கைது
~ இந்த வழக்கில் ஆன்லைன் சூதாட்ட இணையதளத்தின் உரிமையாளர்கள்-நிறுவனர்களில் ஒருவரான குலாம் அப்பாஸ் முனி விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.~ கிரிக்கெட் போட்டியான ஐபிஎல் 2023- ஐ சட்டவிரோதமாக ஒளிபரப்பியதற்காக (ஸ்ட்ரீமிங்) பெட்டிங் இணையதளத்துக்கு எதிராக வயாகாம்18 நிறுவனம் வழக்குப் பதிவு செய்திருந்தது. டிசம்பர் 14, 2023: மிகப்பெரிய அளவிலான ஐபிஎல் 2023 கிரிக்கெட் போட்டியை சட்டவிரோதமாக ஒளிபரப்பு செய்த நிலையில், இடையே, பெட்டிங் (சூதாட்டம்) இணையதளமான ஃபேர்பிளேவுக்கு(‘FairPlay’) எதிராக வயாகாம் 18 சட்டப் போராட்டத்தில் இறங்கியது….
