சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் அரிமா மாவட்ட சங்கங்களின் ஒன்று கூடல் நிகழ்ச்சி

மாவட்ட கவர்னர் அரிமா முகமது நவீன் தலைமையில் சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் அரிமா மாவட்ட சங்கங்களின் ஒன்று கூடல் நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக டெல்லி உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி டி முருகேசன் அவர்கள் கலந்து கொண்டார்

பின் செய்தியாளிடம் பேசிய மாவட்ட கவர்னர் அரிமா முகமது நவீன் அவர்கள் அரிமா சங்கம் சார்பில் தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு மேல் சேவை செய்து வருவதாகவும் மற்றும் மாணவ மாணவிகளுக்கு இந்த ஆண்டு கல்வி உதவி தொகையாக ரூபாய் இரண்டு கோடி வழங்கப்பட்டிருப்பதாக கூறினார்

மேலும் மருத்துவ உபகரணங்கள் நோயாளிகளுக்கு தேவையான உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் மற்றும் அரசுடன் இணைந்து பல்வேறு செயல்பாடுகளில் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் அரிமா சங்கத்தின் மூலமாக மருத்துவ முகாம், உணவின்றி தவிர்க்கும் மக்களுக்கு ஒரு நாளைக்கு 500க்கும் மேற்பட்டோருக்கு உணவு வழங்கப்பட்ட வருவதாகவும் இது போன்ற பல்வேறு உதவிகள் லைன்ஸ் அரிமா மூலமாக செய்து வருவதாக அவர் தெரிவித்தார்

இந்த நிகழ்ச்சியில் அரிமா சர்வதேச சங்க முன்னாள் இயக்குனர் அரிமா சங்கீதா ஜாட்டியா, முன்னாள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ் ராஜேஸ்வரன் அரிமா முன்னாள் சர்வதேச இயக்குனர் சர்வதேச சங்கர் எஸ் ஆர் எம் குழுமத்தின் தலைவர் டாக்டர் சிவகுமார் அரிமா சங்க பல்துறை குழு தலைவர் பாலாஜி ரத்தினம் மற்றும் அரிமா மாணிக்கம், அரிமா ஸ்ரீதர் அரிமா வரதராஜன் பரிமாறவி மற்றும் சி டி நடேசன் எஸ் செல்வராஜ் அரிமா சங்க மக்கள் தொடர்பு அலுவலர் கேஸவாச்சாரியார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

Previous post 11th edition of Hexaware Dream Runners Half Marathon with participants of 5,000 runners
Next post Tamil Actress Deepshikha owns this mystique & delicacy in her latest photoshoot